Sunday, May 29, 2005

காலம்

கனடாவிலிருந்து செல்வம் அருளானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது 'காலம்' இதழ்.மார்ச் மாதம் சிறுகதைச் சிறப்பிதழாக 23 ஆவது இதழ் மலர்ந்துள்ளது.

காலத்தின் ஆரம்பகர்த்தா குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ்


23 ஆவது இதழ்

காலம் இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் tamilbooks at gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.

படங்கள் நன்றி:பதிவுகள்,ஆறாம்திணை

Saturday, December 18, 2004

அறிவிசை

பா.துவாரகனை ஆசிரியராகக் கொண்டு தூண்டி வெளியீடாக வெளிவருகிறது 'அறிவிசை' காலாண்டிதழ்.அறிவியலுக்கு முதன்மை கொடுத்து பொது அறிவு கலை சார்ந்த விடயங்களையும் இணைத்து வழங்கும் இதழ்.மாணவர்களுக்கு நிறைந்த பயனுள்ள இதழ்.
தொடர்புகளுக்கு.

"அறிவிசை"
தூண்டி
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.

Tuesday, November 30, 2004

பெண்

.

தொகுதி:9, இல:1, 2004

தொடர்புகளுக்கு:
விஜயலட்சுமி சேகர்,
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்,
மட்டக்களப்பு.

Saturday, November 13, 2004

போது


போது (வைகாசி - ஆனி 2004)

ஆறாவது ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'போது' இருமாத இதழ்.கவிதை,சிறுகதை,கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு கூறுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
ஆடி-ஆவணி மாத இதழ் 'போது' இதழின் ஆறாவது ஆண்டு மலராகும்.

விலை (இலங்கை ரூபா) 10.00

தொடர்புகளுக்கு
வாகரை வாணன்,
உளவளத்துணை நிலையம்,
இல. 1, யேசுசபை வீதி, மட்டக்களப்பு

Wednesday, November 03, 2004

புதிய தரிசனம்



இளம் தலைமுறையின் ஆக்க இலக்கியத்தின் இன்னொரு வரவு "புதிய தரிசனம"் மாத இதழ்.வதிரி கரவெட்டியைச் சேர்ந்த இளைஞர் குழுவினரால் வெளிக்கொண்ரப்படும் "புதிய தரிசனம்" இதழ் கதை,கவிதை,கட்டுரை மற்றும் பத்தி எழுத்துக்கள் என பல்சுவையுடன் வெளிவருகின்றது.
விலை 20/=

தொடர்புகளுக்கு:
"புதிய தரிசனம்"
அஜந்தகுமார்
வதிரி,கரவெட்டி
யாழ்ப்பாணம்.
இலங்கை.

Wednesday, October 20, 2004

ஆத்மா

மனிதம் கலந்தாய்வுக் குழுவினரால் வெளிக்கொணரப் படுகிறது ஆத்மா சஞ்சிகை.

சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் அனுபவம் சார்ந்து விமர்சனக் கருத்துகளைப் பரவலாக்கும் எளிமையான சஞ்சிகை.

இரண்டு ஆண்டுகளாக மனித விழுமியங்களைத் தாங்கி வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு
மனிதம் கலந்தாய்வுக் குழு.
இல.40.கோவில் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

Wednesday, October 13, 2004

தூண்டி

சிறுகதை,கவிதை,கட்டுரை,நேர்காணல் பத்தி எனப் பல்வேறு ஆக்க இலக்கியக் கூறுகளுடன் காலாண்டிதழாக வெளிவருகிறது 'தூண்டி' இதழ்.

'தூண்டி' எனும் பெயரில் நூல் வெளியீடுகளையும் செய்து வருகிறார்கள்
வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களது நூல்கள் தூண்டி மூலம் பிரசுரமாகின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் தி.செல்வமனோகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

காலாண்டிதழ் விலை ரூபா.40.00

தொடர்புகளுக்கு

'தூண்டி'
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
இலங்கை