Wednesday, October 20, 2004

ஆத்மா

மனிதம் கலந்தாய்வுக் குழுவினரால் வெளிக்கொணரப் படுகிறது ஆத்மா சஞ்சிகை.

சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் அனுபவம் சார்ந்து விமர்சனக் கருத்துகளைப் பரவலாக்கும் எளிமையான சஞ்சிகை.

இரண்டு ஆண்டுகளாக மனித விழுமியங்களைத் தாங்கி வெளிவருகிறது.

தொடர்புகளுக்கு
மனிதம் கலந்தாய்வுக் குழு.
இல.40.கோவில் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.

Wednesday, October 13, 2004

தூண்டி

சிறுகதை,கவிதை,கட்டுரை,நேர்காணல் பத்தி எனப் பல்வேறு ஆக்க இலக்கியக் கூறுகளுடன் காலாண்டிதழாக வெளிவருகிறது 'தூண்டி' இதழ்.

'தூண்டி' எனும் பெயரில் நூல் வெளியீடுகளையும் செய்து வருகிறார்கள்
வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர்களது நூல்கள் தூண்டி மூலம் பிரசுரமாகின்றன.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் தி.செல்வமனோகரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

காலாண்டிதழ் விலை ரூபா.40.00

தொடர்புகளுக்கு

'தூண்டி'
141,கேணியடி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்
இலங்கை

Saturday, October 09, 2004

அம்பலம்

Ampalam

நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது அம்பலம் மாத இதழ்.இளைய தலைமுறையினரை ஆசிரியர்களாகக் கொண்டு அவர்களுக்காகவே வெளிவரும் இதழ்.

விலை:20

தொடர்புகளுக்கு
305,பலாலி வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
இலங்கை.

Tuesday, October 05, 2004

ஏகலைவன்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலிருந்து வெளிவருகிறது 'ஏகலைவன்' கலை இலக்கிய இதழ்.ஆசிரியர் இ.சு.முரளீதரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் பாடசாலையின் மாணவர்களையும் பிற ஆர்வலர்களையும் படைப்பாளிகளாகக் கொண்டும் இருதிங்களுக்கொருமுறை மலர்கிறது 'ஏகலைவன்'.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனது ஆண்டுவிழா மலராக 78 பக்கங்களில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்துடனும் ஆக்கங்களுடனும் ஆறாவது இதழை வெளியிட்டது 'ஏகலைவன்' ஆசிரியர்குழு.

தொடர்புகளுக்கு

ஏகலைவன்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்
இலங்கை.


(Uduppiddi A.M.C
Uduppiddy
Jaffna,
Srilanka.)