Tuesday, October 05, 2004

ஏகலைவன்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலிருந்து வெளிவருகிறது 'ஏகலைவன்' கலை இலக்கிய இதழ்.ஆசிரியர் இ.சு.முரளீதரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டும் பாடசாலையின் மாணவர்களையும் பிற ஆர்வலர்களையும் படைப்பாளிகளாகக் கொண்டும் இருதிங்களுக்கொருமுறை மலர்கிறது 'ஏகலைவன்'.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனது ஆண்டுவிழா மலராக 78 பக்கங்களில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட அட்டைப்படத்துடனும் ஆக்கங்களுடனும் ஆறாவது இதழை வெளியிட்டது 'ஏகலைவன்' ஆசிரியர்குழு.

தொடர்புகளுக்கு

ஏகலைவன்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
உடுப்பிட்டி,யாழ்ப்பாணம்
இலங்கை.


(Uduppiddi A.M.C
Uduppiddy
Jaffna,
Srilanka.)

1 Comments:

At 2:55 AM, Blogger மாலன் said...

மாணவர்களை எழுத்து/ இலக்கியத்தின்பால் ஈர்க்க முயலும் இந்த ஆசிரியர்களும், ஆர்வலர்களும் வாழ்த்துக்குரியவர்கள். நூறு பூக்கள் மலரட்டும்.

 

Post a Comment

<< Home