Thursday, September 30, 2004

பூவரசு


பூவரசின் கடந்த ஆண்டுமலரின் அட்டைப்படம்(நன்றி:பதிவுகள்)

வெளியீடு:
பூவரசு கலை இலக்கியப் பேரவை.

ஆசிரியர்:
இந்துமகேஷ்

முகவரி:
Kultur und Literatur Organisation e.V
Postfach 10 34 01
28034 Bremen
Germany

தொலைபேசி/
தொலைநகல்:
0421 / 5970822

மின்னஞ்சல்:
poovarasu_Germany@hotmail.com

ஜேர்மனியிலிருந்து இருமாத இதழாக இந்துமகேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு,பூவரசு கலை இலக்கியக் குழுவினரது வெளியீடாக வெளிவருகின்றது.

ஆண்டுதோறும் கதை,கவிதை கட்டுரை ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தி பரிசளிக்கின்றனர்.

பூவரசு இதழின் 14 ஆவது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்ட இலக்கியப் போட்டிகள் பற்றிய விபரம்

Monday, September 27, 2004

தெரிதல்



அ.யேசுராசா அவர்களை ஆசிரியராகக் கொண்டு இருதிங்கள் இதழாக வெளிவருகிறது தெரிதல் கலை இலக்கிய இதழ்.இளைய தலைமுறைக்கான இதழ் என்ற மேற்கோளுடன் இளைஞர்களின் வரவை தமிழ் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் வரவேற்கும் இதழாக மிளிர்கிறது.

இலக்கிய விடயங்களை மட்டுமன்றி கலையம்சம் பொருந்திய நல்ல திரைப்படங்கள் பற்றிய அறிவையும் இளைஞர்கள் மத்தியில் ஊட்டும் அவாவுடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
விலை ரூபா 5.00(இலங்கை ரூபா)

தெரிதல் இதழைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது உங்கள் ஆக்கங்களை அனுப்பவோ தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி

'தெரிதல்'
இலக்கம் 1, ஓடக்கரை வீதி,குருநகர்,
யாழ்ப்பாணம்
இலங்கை.

Saturday, September 25, 2004

கைகொடுங்கள்

ஈழத்திலும் புலத்திலும் சிறு சஞ்சிகைகளின் வரவு புத்தூக்கம் பெற்றுள்ளது.பல சஞ்சிகைகள் அவை வெளிவரும் பிரதேசங்களுக்குள்ளேயே வலம்வந்தாலும் ஒரு சில சஞ்சிகைகள் கண்டங்களைத் தாண்டியும் பயணம் செய்கின்றன.

அவ்வகையில் புத்திலக்கிய கர்த்தாக்களும் அவர்களது படைப்புகளும் இணையத்தின் சாத்தியங்களின் மூலம் உலகெங்கும் எட்டப்பட வகை செய்யப்படவேண்டும்.

தமிழ்நாட்டு சஞ்சிகைகளைப் பொறுத்தளவில் அவற்றின் தளம் பெரியது அவை பேசப்படும் அளவும் பெரிதாக இருக்கின்றன.அவை மட்டுமன்றி அவற்றைப் பற்றிய விளம்பரங்கள் விமர்சனங்கள் படைப்புப் பார்வை என்பவற்றின் மூலம் பல்வேறு மட்டத்திலுள்ள வாசகர்களையும் சென்றடைகின்றன.பெரும்பாலான சஞ்சிகைகள் தமக்கென்று தனியான இணையத் தளத்தைக் கொண்டுள்ளன இதன் மூலம் கடல்கடந்தும் அவை வாசகரை இலகுவில் எட்டக் கூடியனவாக உள்ளன

இந்த வசதி ஈழத்து/புலத்து சஞ்சிகைளுக்குக் கிடைப்பது குறைவாகவே உள்ளது பெரும்பாலும் பிரதேசவாரியான வாசகர்களையே அது கொண்டுள்ளது.போதாக்குறைக்கு இணையத்தின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளேயே அவை நின்றும் விடுகின்றன.இன்னும் சில இணையத்தையே எட்டிப் பார்ப்பதில்லை.

ஆகக் குறைந்தது ஒரு வாசகனாக ஈழத்திலிருந்தும் புலத்திலிருந்தும் வரும் சஞ்சிகைகள் பற்றிய விபரத்தை தொகுத்தளிக்க விரும்பினேன்.அதற்கான சிறந்த தெரிவாக இருப்பது வலைப்பதிவு.இலகுவில் விடயங்களை வலையேற்றவும்,வாசிப்பவர்களது பார்வையை இலகுவில் கவரவும் சிறந்தவொரு ஊடகமாக வலைப்பதிவுகள் விளங்குகின்றன.

இது தனியொருவரால் மட்டுமே செயற்படுத்தி முடிக்கக் கூடிய காரியமன்று.நீங்கள் வாழும் பிரதேசங்களில் ஈழத்தவர்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் பற்றிய விபரங்களையும் சஞ்சிகை பற்றிய பார்வையையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதனை ஒரு கூட்டு வலைப்பதிவாக்க முயற்சிக்கிறேன் .கைகொடுங்கள்.

ஒவ்வொருத்தரும் நீங்கள் வதியும் நாடுகளில் வெளிவரும் சஞ்சிகைகளுக்கான உங்கள் மனப்பதிவுகளை எழுதினால் சிறந்ததொரு வாசகர் வட்டத்தை உருவாக்கலாம்.